மருவாய் ஊராட்சியில் மழைநீர் சேகரிப்பு தொட்டி உடைப்பு: காவல்நிலையத்தில் புகார்

வடலூர்: குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட மருவாய் ஊராட்சியில் தமிழக அரசின் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மழை நீர் சேகரிக்கும் தொட்டி மருவாய் ஊராட்சிக்கு மூன்று தொட்டிகள் வழங்கப்பட்டு உள்ளது. மூன்று தொட்டிகளில் ஒரு தொட்டி வேலை முடிவற்ற நிலையில் மீதமுள்ள இரண்டு தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. காலையில் வழக்கம்போல்  உள் மருவாயில் தொட்டி அமைக்கும் பணியை செய்வதற்கு ஊராட்சி பணியாளர்கள் சென்று பார்க்கும் பொழுது தொட்டியை  சமூகவிரோதிகள் உடைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் நேரில் பார்வையிட்டார். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் வடலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் மழைநீர் சேகரிப்புத் தொட்டியை உடைத்த சமூக விரோதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: