நெல்லையில் செயற்கை நீருற்று அமைப்பு

நெல்லை: நெல்லை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு சீரமைப்புகள் பணிகள் நடைபெற்று வருகின்றன. பஸ் நிலையம், விளையாட்டு அரங்கம், கூட்ட அரங்கம், நவீன காய்கனி சந்தை உள்ளிட்ட திட்டப்பணிகள் மட்டுமின்றி நகரை அழகுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதன்படி வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பாலத்தில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டு இரவில் ஒளிரும் நவீன மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளின் மைய தடுப்பு பகுதியில் அதிக வெளிச்சம் தரும் நவீன மின் கம்பங்களுடன் கூடிய மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன. சாலை விரிவாக்கப் பணிகளும் நடைபெறுகின்றன.

இதன் தொடர்ச்சியாக நெல்லை கேடிசி நகர் நான்குவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை சந்திப்பு ரவுண்டானாவில் செயற்கை நீருற்று அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது. இதில் வண்ண மின் விளக்குகளும் அமைக்கப்பட உள்ளன. இதனால் இரவு நேரத்தில் வண்ண நிறத்தில் நீருற்று காட்சியை ரசிக்கலாம்.

Related Stories: