தென்காசி மாவட்டத்தில் பாசன பருவகாலத்திற்கு தேவையான தண்ணீர் ‌திறந்துவிட அரசு ஆணை

தென்காசி: தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரின் அளவு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர் வரத்தினை கருத்தில் கொண்டு, அடவிநயினார்கோவில் பாசனம் - மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம்கால், இலத்தூர்கால், நயினாரகரம்கால், கிளங்காடுகால், கம்பளிக்கால், புங்கன் கால், சாம்பவர் வடகரை கால்வாய் மற்றும் இரட்டைகுளம் கால்வாய் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு  1432-ம் பசலி பிசான சாகுபடி செய்வதற்கு அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து 30.09.2022 முதல் 26.02.2023 வரை 150 நாட்களுக்கு  நாள்  ஒன்றுக்கு வினாடிக்கு 100 க.அடி அளவுக்கு   மிகாமல் பாசன பருவகாலத்தின் மொத்த தேவையான தண்ணீர் அளவான 955.39 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் ‌ திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தென்காசி மாவட்டம், செங்கோட்டை, தென்காசி மற்றும் கடையநல்லூர் ஆகிய வட்டங்களில் 7643.15 ஏக்கர் நிலங்கள்  பாசனவசதி பெறும்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம்,  கருப்பாநதி பாசனம் - பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைக்கால், கிளங்காடுகால் மற்றும் ஊர்மேலழகியான்கால் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு 1432-ம் பசலி பிசான சாகுபடி செய்வதற்கு கருப்பாநதி  நீர்த்தேக்கத்திலிருந்து 30.09.2022 முதல் 26.02.2023 வரை 150 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 25 க.அடி அளவுக்கு மிகாமல், பாசன பருவகாலத்தின் மொத்த தேவையான 1189.34 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் ‌ திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.   இதன் மூலம் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்தில் 9514.70 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

Related Stories: