பைக் மீது லாரி மோதல்; மனைவி, மகள் சாவு: தலைமை செயலக அதிகாரி, மற்றோரு மகள் படுகாயம்

சென்னை: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பேராசிரியர் நகரை சேர்ந்தவர் பழனி. சென்னை தலைமை செயலகத்தில் நிதி துறையில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வித்யா (40). இரட்டை குழந்தைகள் பூர்ணிமா, பூர்விகா (4). இவர்கள், உறவினர் இல்ல மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி ஓரிக்கை மணிமண்டபம் பகுதியில் நடந்தது. இதற்காக, நேற்று அதிகாலை பைக்கில் மனைவி வித்யா, குழந்தைகள் பூர்ணிமா, பூர்விகா ஆகியோருடன் பழனி சென்றார். காந்தி நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரில் அதிவேகமாக வந்த கல்குவாரி டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது.

இதில், வித்யா மற்றும் பூர்ணிமா ஆகியோரின் தலை மீது லாரி சக்கரம் ஏறியதில் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த பழனி மற்றும் பூர்விகா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: