வேளாண்மையில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு ரூ.6 லட்சம் பரிசு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு ரூ.6 லட்சம் பரிசு தரப்படும்என்று வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ெதரிவித்துள்ளார். இதுகுறித்து வேளா ண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய உள்ளூர் கண்டுபிடிப்பு ஆகிய மூன்று இனங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு ஊக்குவித்து பாராட்டி பரிசளிக்கும் திட்டத்தினை 2021-2022ம் ஆண்டில் அறிமுகப்படுத்தி ரூ.6 லட்சம் நிதியினை ஒதுக்கியது. நடப்பாண்டிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி,

* மாநில அளவில், உள்ளூர் புதிய விவசாய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதில் சிறந்து விளங்கும் ஒரு விவசாயிக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும், வேளாண் பணிகளை எளிதாக்கும் வகையில், இயந்திரத்தை புதியதாகக் கண்டுபிடிக்கும் ஒரு விவசாயிக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.  

* மாநில அளவில் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2ம் பரிசாக ரூ.60 ஆயிரம்,  3ம் பரிசாக ரூ.40 ஆயிரம் ரொக்க பரிசாக வழங்கப்படும்.  

*  மாநில அளவில் விளைபொருள் ஏற்றுமதியில் சிறப்பாகச் செயலாற்றும் ஒரு விவசாயிக்கு ₹2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி மூலமாகத் தங்களது பெயர்களை பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்திட வேண்டும். நுழைவு கட்டணமாக ரூ.100 சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் செலுத்தி  படிவத்துடன் இணைத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: