கோயம்பேடு, தரமணியில் அரசு அதிகாரிகளை மிரட்டிய ஆசாமி அடையாளம் தெரிந்தது: சிசிடிவி காட்சி மூலம் தீவிர விசாரணை

அண்ணாநகர்: கோயம்பேடு மற்றும் தரமணியில் லஞ்சஒழிப்பு இன்ஸ்பெக்டர் எனக்கூறி அரசு அதிகாரிகளை மிரட்டிய ஆசாமியின் அடையாளம் தெரிந்தது. சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கோயம்பேடு சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் செயற்பொறியாளர் ராஜன்பாபு (48), இவர், சென்னை கோயம்பேட்டில் இயங்கி வரும் சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் பணிபுரிகிறார். கடந்த 22ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் என்று கூறி ஒரு மர்ம ஆசாமி  அவரது அலுவலகத்திற்குள் புகுந்து மிரட்டியதுடன் வீட்டையும் சோதனையிட்டுள்ளார். இதேபோல் தரமணியில் கடந்த 23ம் தேதி, அசோகன் (55) என்ற நீர் ஆய்வு மையம் நீரியியல் மற்றும் தரை கட்டுப்பாடு அலுவலகத்தில் நீர்வளத்துறை தலைமை பொறியாளரையும் மிரட்டி பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.  

இதுகுறித்து கோயம்பேடு மற்றும் தரமணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதிகாரிகளை குறிவைத்து மிரட்டியதால் போலீசார் அந்த ஆசாமியை பிடிக்க தீவிரம் காட்டினர்.   

இந்நிலையில் போலீசார் தரமணி மற்றும் கோயம்பேடு பகுதியில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கோயம்பேடு  சிஎம்டிஏ அலுவலகத்தில் மர்ம ஆசாமி நுழைந்த காட்சி சிசிடிவியில் பதிவானது,  இதை அடிப்படையாக வைத்து மர்ம ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: