சென்னை: நடிகர் விஷால் வீடு மீது மர்மநபர்கள் கற்களால் தாக்கியுள்ளனர். தயாரிப்பாளரும் பிரபல நடிகருமான விஷால் சென்னை அண்ணா நகர் 12வது தெருவில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார், இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் விஷால் வீட்டினை மர்ம நபர்கள் கற்களால் தாக்கியுள்ளனர். இதில், விஷாலின் வீட்டு கண்ணாடிகள் சேதமானது. வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா ஆய்வுசெய்த போது சிவப்பு காரில் வந்த மர்ம நபர்கள் கற்களை வீசி சேதப்படுத்தும் காட்சி பதிவாகியுள்ளது.