கூடலூரில் 2 நாள் பாதயாத்திரை மேற்கொள்ள ராகுல்காந்தி நாளை மீண்டும் தமிழகம் வருகிறார்

சென்னை: கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி அங்கு தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் வழியில் மீண்டும் அவர் நாளை தமிழகம் வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது நடை பயணத்தை கடந்த 7ம்தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். அவர் அங்கிருந்து, நேராக கேரளாவுக்கு சென்றார். அங்கு 11ம் தேதி தொடங்கிய பாதயாத்திரையானது திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்கள் வழியாக 400 கி.மீ தூரத்தை கடந்து உள்ளது. நேற்று அவர் மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார்.

இந்நிலையில், கேரளாவில் பாதயாத்திரையை முடித்த நிலையில் ராகுல்காந்தி நாளை (வியாழக்கிழமை) மீண்டும் தமிழகம் வருகிறார். அவர் நாளை நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபயணம் மேற்கொள்கிறார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக, நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்திற்கு வருகிறார். கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் ராகுல்காந்தி கோழிப்பாலத்தில் இருந்து 6 கி.மீ தூரம் பாத யாத்திரையாக கூடலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வருகிறார். கூடலூர் புதிய பஸ் நிலைய பகுதிக்கு வரும் ராகுல்காந்தி, மாலை 4 மணிக்கு அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

Related Stories: