பெய்ஜிங்: வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக பரவிய வதந்திகளுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் முற்றுப்புள்ளி வைத்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக நேற்றில் இருந்து உலகம் முழுவதும் செய்திகள் பரவி வருகின்றன. மேலும் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் சீனாவின் ஒட்டுமொத்த ஆட்சியும் மக்கள் விடுதலை ராணுவத்தின் கைகளுக்குப் போய்விட்டதாக செய்திகள் வந்தன. இந்த யூகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் ஜி ஜின்பிங்கும் கடந்த சில நாட்களாக பொது வெளியில் தோன்றாமல் இருந்தார்.