அமைச்சர் எ.வ.வேலுவுடன் மலேசியா நாட்டின் உள்விவகாரத்துறை அமைச்சர் டேடோ செரி சந்திப்பு: கூட்டு வணிகம் குறித்து விவாதம்

சென்னை: மலேசியா நாட்டின் உள்விவகாரத்துறை அமைச்சர் டேடோ செரி ஹம்ஷபின் ஜெயனூதீன், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து பேசினார். மலேசியா நாட்டின் உள்விவகாரத்துறை அமைச்சர்  திரு.டேடோ செரி ஹம்ஷபின் ஜெயனூதீன், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்  எ.வ.வேலுவை சந்தித்தார்கள்.

இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு முதலீடு, கூட்டு வணிகம், மலேசியா-தமிழ்நாடு இடையே கூட்டுறவு குறித்து விவாதித்தார்கள். இந்த சந்திப்பின்போது, மலேசியா அமைச்சர் அவர்களின் முதன்மை தனி செயலாளர் திரு.டேடோ அரிபின் டோபிஸ், திரு.டேடோ எஸ்.பிரகதீஷ் குமார், திரு.டேடோ வைர நைனா முகம்மது சுல்தான், திரு. ரவீந்திரன் கோவிந்தசாமி மற்றும்  திரு.மணிவாசகன் இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர், பொதுப்பணித்துறை, துறை சார்ந்த அலுவலர்கள் பங்கு பெற்றனர்.

Related Stories: