சென்னை தண்டையார்பேட்டையில் எண்ணெய் குழாயில் கசிவு: சாலையில் ஆறாக பாமாயில் ஓடியதால் பரபரப்பு..!!

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டு சாலையில் பாமாயில் ஆறாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை அருகே உள்ள தாங்கலில் செயல்பட்டு வரும் கே.வி.டி. ஆயில் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு செல்லும் குழாயில் நாகூரான்தோட்டம் என்ற இடத்தில் பழுது ஏற்பட்டு எண்ணெய் கசிந்துள்ளது. இதனால் சாலை முழுவதும் எண்ணெய் படலமாக காட்சியளிக்கிறது.

குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் தனியார் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில் சாலையில் கசிந்துள்ள எண்ணெய்யை வாலியில் அகற்றுவதால் பணிகள் முடிய தாமதமாகும் என்று பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சாலையில் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கசிந்துள்ள எண்ணெய்யை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: