பொள்ளாச்சி சந்தைக்கு வாழைத்தார் வரத்து அதிகரிப்பு-விற்பனை கடும் மந்தம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு நேற்று, வாழைத்தார்கள் வரத்து அதிகரித்ததால் விற்பனை கடும் மந்தமானது. பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கொண்டு வரப்படும் வாழைத்தார்கள், தரத்திற்கேற்றது போல விலை நிர்ணயம் செய்யப்பட்டு எடை போட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு வரை சுபமுகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து இருந்ததால், அனைத்து ரக  வாழைத்தார்களுக்கும்  கிராக்கி ஏற்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனையானது.

நேற்று நடந்த ஏலத்தின்போது, சுற்றுவட்டார பகுதியில் இருந்தும், வெளியூர்களிலிருந்தும் வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்துள்ளது. ஆனால், விசேஷ நாட்கள் இல்லாமல் விற்பனை மந்தமாகி குறைவான விலைக்கு போனது. பெரும்பாலான வாழைத்தார்கள் குறைவான விலைக்கே நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது. செவ்வாழைத்தார் ரூ.40க்கும், பூவந்தார் ரூ.33க்கும், சாம்ராணி ரூ.30க்கும், மோரீஸ் ரூ.32க்கும், ரஸ்தாளி ரூ.35க்கும், நேந்திரன் 1 கிலோ ரூ.30க்கும், கேரள ரஸ்தாளி 1 கிலோ ரூ.35க்கும் என, குறைவான  விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories: