மூவரசன்பட்டு ஊராட்சியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட முகாம்

ஆலந்தூர்: மூரசம்பட்டில் முதலமைச்சரின் மருத்துவ  காப்பீடு திட்ட முகாம் நடந்தது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட முகாம் மற்றும் இதயநோய், சர்க்கரை நோய் சிகிச்சை முகாம் முவரசன்பட்டு ஊராட்சியில் உள்ள கலைமகள் பள்ளியில் நேற்று  நடந்தது.  இந்த முகாமிற்கு கீழ்க்கட்டளை லயன்ஸ் கிளப்பை சேர்ந்த இளங்கோ தலைமை வகித்தார். விஜயகுமார், ராஜீவ்குமார் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

முகாமில் மூவரசன்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.கே ரவி, லயன் ஆர்.வி ரவிச்சந்திரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு முகாமினை தொடக்கி வைத்தனர். இதய சிகிச்சை நிபுணர் ஆர்.எச்.சுந்தர் தலைமையிலான மருத்துவர்கள சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் தியாகராஜன், லயன்ஸ் கிளப்பை சேர்ந்த ராஜேந்திரபாபு, ரவிச்சந்திரன், பி.வி.ரவீந்திரன், ஆர்.பாபு உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: