வாக்கிங் சென்றவர் தவறி விழுந்து சாவு

ஆலந்தூர்: நங்கநல்லூர் துரைசாமி கார்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் வசித்து வந்தவர் விஷ்வநாதன் (62). இன்சூரன்ஸ் நிறுவனத்தில பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் வாக்கிங் பயிற்சி செய்தபோது, எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார்.  இதில், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த பழவந்தாங்கல் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: