கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபருக்கு 133 நாள் சிறை

காஞ்சிபுரம்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த வாலிபருக்கு 133 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் உத்தரவிட்டார். இதன்படி, விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சின்ன காஞ்சிபுரம், சுக்லாபாளையம் கிராமத்தை சேர்ந்த டிராவிட் (எ) மந்தம் (29) என்பவரை கைது செய்தனர்.

இதையடுத்து ஒரு வருடம் நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு குற்றச் செயல்களில் டிராவிட் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார். இதனால் நன்னடத்தை விதிமுறைகள் மீறியதாக டிராவிட்டை 133 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி உத்தரவிட்டார். இதையடுத்து டிராவிட்டை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: