எடப்பாடி என்னும் வைரஸ் பரவலால் அதிமுக ஊழல் மயமானது; கோஷ்டிகள் மயமானது; இப்போது சாதிமயமானது: மருது அழகுராஜ் கடும் விமர்சனம்..!!

சென்னை: எடப்பாடி பழனிச்சாமியின் ஆக்கிரமிப்பு மூலம் அதிமுக தன்னை முழுமையான சாதிக்கட்சியாக பிரகடனம் செய்துள்ளது என்று ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மருது அழகுராஜ், அதிமுக சாதிக்கட்சியாக பிரகடனம் செய்துள்ளதை செங்கோட்டையன் பொது மேடையிலேயே அறிவித்துள்ளார். அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, சி.வி.சண்முகம் மட்டுமே டெல்லி சென்றிருந்தனர். டெல்லி சென்ற குழுவில் வேலுமணி, சி.வி.சண்முகம் தவிர உளுந்தூர்பேட்டைக்கு அப்பால் ஒருவரும் செல்லவில்லை.

செங்கோட்டையனை கொண்டு எடப்பாடி தரப்பு தங்கள் சாதிய நிலைப்பாட்டை அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி என்னும் வைரஸ் பரவலால் அதிமுக ஊழல் மயமானது; கோஷ்டிகள் மயமானது; இப்போது சாதிமயமானது. மொத்தத்தில் அதிமுக நாசமா போனது; நாலு துண்டா ஆனது என்பதே சத்தியமான உண்மை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Related Stories: