கொரோனா கால போராட்ட விவகாரம்; அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு: ஐகோர்ட் ரத்து

சென்னை: கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் செந்தில் பாலாஜி தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை எனக் குற்றம்சாட்டி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில், ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தப்பட்டதாகவும், விதிகளை மீறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Stories: