அறநிலைய துறையில் அரசுக்கு ஆலோசனை வழங்க நீதிபதி மதிவாணன் நியமனம் பற்றி உயர்மட்ட ஆலோசனை குழுவில் முடிவு: ஆணையர் குமரகுருபரன் தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் எடுக்க வேண்டிய திருத்தங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க நீதிபதி மதிவாணனை நியமனம் செய்ய உயர்மட்ட ஆலோசனைக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கை: தற்போது நடைமுறையில் உள்ள இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க நீதிபதி மதிவாணன் நியமனம் செய்திட உயர்மட்ட ஆலோசனைக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சட்டத்தில் எடுக்க வேண்டிய திருத்தங்கள் குறித்து நீதியரசருக்கு உரிய பரிந்துரைகள் வழங்கும் பொருட்டு இத்துறையில் தற்பொழுது பணியாற்றி வரும் அலுவலர்களை கொண்ட துணைக்குழுக்கள் அமைத்து உத்தரவிடப்படுகிறது. அக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அக்குழுக்கள் பரிசீலிக்க வேண்டிய சட்டப்பிரிவுகள் அடங்கிய பட்டியல் அனுப்பப்படுகிறது. குழுக்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்று நீதியரசர் பரிசீலனைக்கு வைக்கும் பணியை எடுக்க தலைமையிட இணை ஆணையர் (சட்டப்பிரிவு) ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது. ஒவ்வொரு குழுவும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அறநிலைய சட்டப்பிரிவுகளில் எடுக்க வேண்டிய திருத்தங்கள் குறித்தான கருத்துரையை ஆணையர் அலுவலகத்திற்கு வரும் 30ம் தேதிக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: