எல்லை பிரச்னை; அசாம் - மிசோரம் முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை

அஸ்சால்: வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே பல ஆண்டுகளுக்காக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காண ஒன்றிய அரசு எடுத்து முயற்சிகளால், இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இந்நிலையில், நீண்ட காலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண மிசோரம் முதல்வர் ஜோரம் தங்காவும், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் இன்று மதியம் டெல்லியில் உள்ள அசாம் ஹவுசில் சந்தித்து பேச உள்ளனர். எல்லைப் பிரச்னை தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் சந்திக்கும் 2வது சந்திப்பு இது. கடந்தாண்டு நவம்பரில் இவர்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Related Stories: