1 முதல் 5ம் வகுப்பு வரை அக்.1ம் தேதி முதல் விடுமுறை: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு அக்டோபர் 8ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவித்து தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 மதல் 8ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ மாணவியருக்கு தற்போது காலாண்டுத் தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிலைமைகளுக்கு ஏற்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இம்மாத இறுதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் பேரில் பல்வேறு இடங்களில் காலாண்டுத் தேர்வுகள் நடக்கின்றன. இந்நிலையில், காலாண்டு விடுமுறை தொடர்பாக தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி வெளியிட்டுள்ள அறிவிப்பு: எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக இரண்டாம் பருவத்துக்கு ஒன்றிய அளவில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு அக்டோபர் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை 3 நாட்கள் பயிற்சி நடத்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு 6ம் தேதி முதல் வழக்கம் போல பள்ளிகள் செயல்படும்.

Related Stories: