சென்னை பெருங்குடியில் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் வெள்ளி விழாவில் சிறப்பு மலரை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் வெள்ளி விழா கல்வெட்டை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்துவைத்துள்ளார். அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் வெள்ளி விழாவில் சிறப்பு மலரை வெளியிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். 1997-ல் கலைஞரால் தெற்காசியாவிலேயே முதல் முதலாக சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது தான் அம்பேத்கார் பல்கலைக்கழகம் என்றும் 1989-ம் ஆண்டு நூற்றாண்டு கண்ட சென்னை சட்ட கல்லூரிக்கு அம்பேதகர் சட்டகல்லுரி என பெயர் சூட்டப்பட்டது என்றும் கிரீன்வேஸ் சாலையில் தாம் குடியேற இருந்த இல்லத்தை சட்டபல்கலைகழகத்திற்காக கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி என்று கூறியுள்ளார்.

40 மாணவர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் தற்போது 40 ஆயிரம் மாணவர்களுடன் இறங்கி வருகிறது. சமூகநீதியின் அடிப்படையில் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதலமைச்சர் கூறியுள்ளார். சட்டப்படிப்பிற்காக பல்கலைக்கழகம் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் சட்ட அறிவை, வாத திறமையை ஏழை எளிய மக்களின் நீதிக்காக பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.  

தற்போது திமுக ஆட்சிக்காலத்தில் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக வெள்ளி விழா நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார். இலவச பேருந்து  சேவை மாணவிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். அடிப்படை உரிமைகளை காக்க மாணவர்கள் தங்களது படிப்பை பயன்படுத்த வேண்டும் என்று அம்பேத்கர் சட்டப்பல்கலைகழக விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

Related Stories: