திமுக இளைஞர் அணியில் இணைந்த பழங்குடியினர்: பால் வளத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் நடந்தது

ஆவடி: ஆவடியில்  பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை பணியை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார். இதில், 200 பழங்குடியின இளைஞர்கள்  அமைச்சர் தலைமையில், திமுக இளைஞர் அணியில் தங்களை இணைத்து கொண்டனர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் திமுக இளைஞரணியை வலிமைப்படுத்தும் விதமாக உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதிக்குட்ப்பட்ட பகுதிகளில் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், குறிப்பாக ஆவடி மற்றும் திருமுல்லைவாயில் உள்ள பழங்குடியினர் மக்கள் வசிக்கும் பகுதியில் இளைஞர் அணியில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் நேற்று நடந்தது. இதில், மாநகர செயலாளர் ஆசிம் ராஜா மற்றும் பகுதி செயலாளர் நாராயண பிரசாத், பேபி சேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், மண்டல குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி நாராயண பிரசாத், 23வது வட்டச் செயலாளர் ஜெயித்தேன் மற்றும் தமிழக பால்வளத்துறை  அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில்  ஆகியோர் நேரடியாக பழங்குடியின இளைஞர்களின் வீட்டிற்கு சென்று அவர்கள் நிரப்பிய திமுக இளைஞர் அணியில் இணைந்த  படிவத்தை பெற்று கொண்டனர். இதன் மூலம் திமுக இளைஞர் அணியில் அந்த இளைஞர்கள் அணியில் தங்களை இணைத்து கொண்டனர்.

இது குறித்து பழங்குடியினர் கூறுகையில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் சீரிய செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  நரிக்குறவர் காலனியில் வசிக்கும் பழங்குடியினர் 200 பேர் தங்களை திமுகவின் இளைஞரணியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் முன்னிலையில் இணைந்தோம்.  முதல்வரின் முயற்சியால்  நரிக்குறவர்கள் எம்.பி.சி பிரிவில் இருந்ததால் இட ஒதுக்கீடு கிடைப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டு கல்வி வேலை வாய்ப்பு போன்றவற்றில் முன்னேற்றம் இல்லாமல் இருந்ததாகவும் தற்போது பழங்குடியின மக்கள் பிரிவில் சேர்க்கப்பட்டதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்றனர்.  தங்களுக்கு நல்லது செய்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

*பூமி பூஜை

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஆவடி சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டிலான அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட அமைச்சர் நாசர் சிறப்பு பூஜையிட்டு அடிக்கல் நாட்டினார். உடன் 40வது மாமன்ற உறுப்பினர் சத்யா கோ.ரவி. அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: