பண்ருட்டி அருகே நத்தம் கிராமத்தில் வாய்க்கால்களை தூர்வார கிராம மக்கள் கோரிக்கை

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் ஆ.நத்தம் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறை ஏரியில் தற்போது தண்ணீர் நிரம்பியுள்ளது. ஏரியிலிருந்து பாசனத்திற்கு செல்லும் மெயின் மற்றும் கிளை வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு காரணமாகவும், நீண்ட நாட்களாக தூர்வாராமல் இருப்பதாலும் முறையாக தண்ணீர் தேவையான இடத்திற்கு கொண்டு செல்லமுடியாமல் வீணாக போகக்கூடிய நிலையில் உள்ளது.

ஏரி நிரம்பி கடை கோடிக்குச் சென்று கலுங்கு வழிந்தாலும் கடைகோடியில் உள்ள விவசாயிகள் பாசனம் பெற முடியாத நிலை உள்ளது. எனவே நெல் நடவுக்கான நாற்றாங்கால் விடுவதற்குள் வாய்க்கால்களை அளந்து ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரி கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: