கோடநாடு வழக்கை திசை திருப்பவே பொய் புகார்களை கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

சென்னை: கோடநாடு வழக்கை திசை திருப்பவே பொய் புகார்களை கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; கொரோனா தொற்றில் இருந்து அனைவரையும் காப்பாற்றி மக்களை சகஜ நிலைக்கு கொண்டு வந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சியை அனைத்து தரப்பிலும் பாராட்டுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15 மாதங்களை கடந்து சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது.

சொத்து வரி உயர்வு குறித்து பல பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி பழனிசாமி. சொத்து வரி உயர்த்தாவிட்டால் மானியங்கள் நிறுத்தப்படும் என்று ஒன்றிய அரசு கூறியது. ஒன்றிய அரசு கூறியது பற்றி முதலமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவில் போடப்பட்ட வரி சீராய்வு செய்யப்பட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை மக்கள் யாரும் மறக்கமாட்டார்கள். ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் எடப்பாடி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். யாரோ எழுதி கொடுத்ததை படித்து விட்டு சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

பொறுப்பில் இருந்த ஈபிஎஸ் பொறுப்போடு பேச வேண்டும். முதலமைசசர் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூடுகிற கூட்டம், மக்கள் தலைவராக  இருப்பதை பார்த்து தாங்கிக்கொள்ள முடியாமல் பேசுகிறார். தன்னோடு இருக்கும் தொண்டர்களை தக்க வைத்துக்கொள்ள ஆதாரமற்ற முறையில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. கோடநாடு வழக்கு மிக தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது; திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. கோடநாடு வழக்கை திசை திருப்பவே பொய் புகார்களை கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தான் தொடர்ந்த அனைத்து வழக்குகளிலுமே ஜெயலலிதா உட்பட பலர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடி ஆட்சியில் ஆன்லைன் ரம்மிக்கு தடை போட்ட உத்தரவு நீதிமன்றத்தில் தீர்த்துப் போனது. திமுக அரசு போட்ட ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஓய்வு பெற்று நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியை தடை செய்யுமாறு ஒன்றிய அரசை ஏன் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தவில்லை. அதிமுகவை கைப்பற்ற ஓபிஎஸ், பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன் போட்டி போடுகின்றனர். பழனிசாமி பினாமி வீட்டில் ரெய்டு நடந்துள்ளது, அதை மூடி மறைக்கவே ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

எடப்பாடி தமது உறவினர்களுக்கு மட்டுமே 4,500 கோடி மதிப்புள்ள பணி ஒப்பந்தங்களை வழங்கியுள்ளார். அதிமுக பொய் பிரச்சாரங்களை தொடர்ந்தால் திமுகவும் தெருமுனை கூட்டங்களை நடத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: