ராஜபாளையம் அருகே கண்மாயில் செத்து மிதந்த மீன்கள்: குத்தகைதாரர்கள் வேதனை

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்தில் குலசேரி பெரியகண்மாய் உள்ளது. இக்கண்மாயில் மீன் குஞ்சுகள் வளர்க்க பொதுப்பணித்துறை சார்பில் ஏலம் விடப்பட்டது. தெற்கு வெங்கடாநல்லூரைச் சேர்ந்தவர் கண்மாயை ஏலம் எடுத்து, கர்நாடகாவிலிருந்து மீன்குஞ்சுகள் வாங்கி வந்து கண்மாயில் விட்டு வளர்த்து வந்தார்.

இந்நிலையில், மீன்கள் போதிய வளர்ச்சி இல்லாமல், கண்மாயில் செத்து மிதப்பதால் ரூ.13 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக குத்தகை எடுத்தவர் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘தமிழக அரசு மீன் குஞ்சுகளை கண்மாய்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால், குஞ்சுகள் தரம் தெரிந்து கண்மாயிகளில் மீன்குஞ்சுகளை விட்டு நல்ல வளர்ச்சி அடையும். விற்பனை செய்ய முடியும்.

வெளிமாநிலங்களிலிருந்து வாங்கி வரும் மீன்குஞ்சுகள் வளர்ச்சி இல்லாமல் செத்து மிதப்பதால், எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மீன் குஞ்சுகளை விற்பனை செய்ய மீன்வளத்துறை மூலம் ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் சுத்தமாக இருந்த கண்மாய்களை பெயர் அளவிற்கு தூர்வாரும் பணியை செய்வதாக கூறி, பணிகள் ஏதும் செய்யாமல் சென்றுவிட்டனர். பல கண்மாய்களில் முட்புதர்கள் அடர்ந்தும் மழைநீர் சேமிக்க முடியாத அளவு உள்ளது. எனவே, தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருதி, பொதுப்பணிதுறை மூலம் கண்மாய்களை தேர்வு செய்து, தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

Related Stories: