சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதியில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி

சாயல்குடி: சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி, முதுகுளத்தூர் அருகே எஸ்.பி கோட்டை ஆகிய கிராமங்களில் கோயில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சு விரட்டு போட்டிகள் நடந்தது. சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி கிராமத்தில் உமையநாயகி அம்மன் கோயில், முதுகுளத்தூர் அருகே வாழவந்தம்மன் கோயில் பொங்கல் திருவிழா நடந்தது. முளைப்பாரி, மதுக்குடம், பால்குடம், அக்னிசட்டி எடுத்தும், கிராம பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

விழாவையொட்டி இரண்டு கிராமங்களிலும் நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடந்தது. தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து 14 காளைகள் கலந்து கொண்டது. 120க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.

சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் வந்து பார்த்து ரசித்தனர். காளை முட்டியதில் 5க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் சிறு காயமடைந்தனர். கீழக்கரை, முதுகுளத்தூர் காவல் சரகத்திலிருந்து தலா 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: