100 ஆதிதிராவிடர் தொழில் முனைவோருக்கு ரூ.3 கோடி மதிப்பில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம்

சென்னை: விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்க்கு உரு கொடுக்கும் வகையில் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ் அவர்களால் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக நியமனம் பெற்று,  ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை நிலையம் தொடங்கிட, தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ.90.00 இலட்சம் மானியம் வழங்கப்படும்”.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் 2022-2023ஆம் ஆண்டிற்கான அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 80 ஆதிதிராவிடர் தொழில் முனைவோர்களுக்கும்,  20 பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கும்,  மொத்தம் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90.00 இலட்சம் மானியம் வழங்குவதற்கு ஏதுவாக நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: