பிஇ கலந்தாய்வில் கல்லூரி தேர்வு செய்தவர்களுக்கு 7 நாள் கெடு

சென்னை: என்ஜினியரிங் படிப்புக்கான பொது  கலந்தாய்வும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான  கலந்தாய்வும் கடந்த 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலை கழகத்தில் பிஇ பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில், 14 ஆயிரத்து 524 தரவரிசையில் இருக்கும்  மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலில் விருப்ப இடங்களை தேர்வு  செய்ய 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

அதன்படி, 12 ஆயிரத்து 294 பேர்  விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். அவர்களில் 11 ஆயிரத்து 595 பேருக்கு  தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு  இடங்களை உறுதி செய்வதில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, விருப்பமான இடங்கள் கிடைத்த மாணவர்கள் அந்தந்த கல்லூரியில் 7 நாட்களுக்குள் சென்று சேர வேண்டும். சேரா விட்டால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ரத்து செய்யப்படும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: