ஜெப் பெசோசுக்கு முதல் பின்னடைவு

உலக பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனத் தலைவர் ஜெப் பெசோசுக்கு சொந்தமான விண்வெளி நிறுவனம் புளு ஓரிஜன். இதன் ராக்கெட், அமெரிக்காவின் மேற்கு டெக்சாசில் உள்ள  விண்வெளி தளத்தில் இருந்து நேற்று முன்தினம் ஏவப்பட்டது. ஆனால், பூமியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, 29 ஆயிரம் அடி உயரத்தில் ராக்கெட் வெடித்து சிதறியது. ஆனால், இதில் மனிதர்கள் யாரும் இல்லை. இந்த தோல்வி, விண்வெளி துறையில் பெசோசுக்கு கிடைத்த முதல் பின்னடைவாக கருதப்படுகிறது. முதல் படம்: தீப்பிழப்புடன் ராக்கெட். அடுத்த படம்: ராக்கெட்டில் வெடித்த பிறகும் அதில் பிரிந்த கேப்சூல், பத்திரமாக தரைஇறங்கியது.

Related Stories: