இலங்கை கடற்படையின் தாக்குதலால் பழைய முறைக்கு திரும்பிய மீனவர்கள்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கரைவலையில் மீன் பிடிப்பில் ஆர்வம் கட்டி வருகின்றனர். கடலில் இருந்து மீன்கள் கூடிய வலையை கரைக்கு எழுத்துவரும்போது சோர்வு தெரியாமல் இருப்பதற்காக இந்த பாடலை படுகின்றனர். விசை படகு மீன் பிடி தொழிலுக்கு இலங்கை கடல் படையினரால் அச்சுறுத்தல் நிலவி வருவதால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டுக்கு வந்த கரைவலை மீன்பிடி முறைக்கு திரும்பியுள்ளனர் மீனவர்கள். மீன்பிடி தொழிலை தவிர வேறு எதுவும் தெரியாததால் வேறு வழியின்றி சொற்ப வருமானத்துக்கு இதில் ஈடுபடுவதாக வேதனையுடன் கூறுகின்றனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஒரு காலத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 1000-த்துக்கும் அதிகமான நாட்டுப்படகுகளிலும் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற காலம் மலை ஏறிவிட்டதாக மீனவர்கள் கவலையுடன் கூறுகின்றனர். கரைவலை மீன்பிடியில் கிடைக்கும் குறைந்த  வருவாயை வைத்து குடும்பத்தை நடத்த இயலவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உதவ முன்வர வேண்டும் என்று மீனவர்களும், மீன்பிடி தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: