முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் வேளாண்மை விரிவாக்க கட்டிடம்-அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள வேளாண்மை விரிவாக்கம் கட்டிட்த்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முத்துப்பேட்டை அடுத்த உதயமார்ததாண்டபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பழமையான வேளாண்மை விரிவாக்கம் அலுவலகம் கட்டிடம் ஒன்று தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. இங்கு சுற்றுபகுதியை சேர்ந்த விவசாயிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட தரமற்ற கட்டுமாணத்தால் கட்டிய சில நாட்களிலே பல பகுதிகளில் உள்ள சுவர்கள் விரிசல் ஏற்பட்டது. அதேபோல் பில்லர்கள் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்த சிமெண்ட் காரைகள் பெயர்ந்து உதிர்ந்தவாறும் உள்ளிருக்கும் இரும்பு கம்பிகளும் வெளியே தெரிகிறது. பில்லர்களின் இணைப்புகளும் விரிசல் கண்டதுடன் கிழக்கு கடற்கரை சாலை அருகே இந்த கட்டிடம் உள்ளதால் கனரக வாகனங்கள் செல்லும்போது ஆட்டம் காணுகிறது.

இதனால் பலமிழந்து நிற்கும் கட்டிடத்தை கண்டு இப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர். மேலும் இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களும், பல்வேறு அலுவல் தொடர்பாக உள்ள ஊராட்சி அலுவலகத்துக்கும், அருகில் இருக்கும் நூலகத்திற்கு வருவோர், அங்காடிக்கு வரும் பொதுமக்கள் அருகேயுள்ள இந்த கட்டிடத்தின் அபாய ஸ்திரத்தன்மை கண்டு கவலையடைந்துள்ளனர்.

அதுமட்டுமல்ல உள்ளே இருந்து பணியில் ஈடுபடும் வேளாண்மைதுறை அலுவலர்களும் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் இந்த கட்டிடத்தை சீரமைத்து அல்லது இடித்து அப்புறபடுத்தி கட்டி தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பல முறை அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து கூறியும் எந்த பலனும் இல்லை.

எனவே இனியும் காலம் கடத்தாமல் மாவட்ட கலெக்டர் கவனத்தில் கொண்டு இந்த பழுதடைந்த இந்த வேளாண்மை விரிவாக்கம் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்களும் சுற்றுபகுதி விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: