விரைவில் தேசிய கட்சி சந்திரசேகர ராவ் உறுதி: திட்டங்கள் அனைத்தும் தயார்

ஐதராபாத்: விரைவில் தேசிய அரசியல்  கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) ஆட்சி நடக்கிறது. பாஜ.வுடன் நெருக்கமாக இருந்த இவர், தற்போது அக்கட்சியுடன் கடுமையான மோதல் போக்கை கடைபிடிக்கிறார். மேலும், 2024 மக்களவை தேர்தலில் பாஜ.வை தோற்கடிக்க, தேசியளவில் கூட்டணியை உருவாக்க சந்திரசேகர ராவ் முயன்று வருகிறார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களை அவர் சந்தித்து பேசி வருகிறார்.

இந்நிலையில்,  சந்திரசேகர ராவ் நேற்று கூறுகையில் , ‘புதிய தேசிய கட்சியை விரைவில் தொடங்குவேன்.  அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. அறிஞர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல துறை நிபுணர்களுடன் நடத்திய ஆலோசனையில் மாற்று தேசிய கொள்கை குறித்த கருத்தொற்றுமை ஏற்பட்டு உள்ளது. விரைவில் தேசிய அரசியல்  கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும்’’ என்றார். கேசிஆர்- குமாரசாமி சந்திப்பு கர்நாடக முன்னாள் முதல்வரும்  மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி, ஐதராபாத்தில் நேற்று சந்திரசேகர ராவை சந்தித்து பேசினார்.  இதில், தேசிய அரசியலில்  சந்திரசேகர ராவ் முக்கிய பங்கு  பகிக்க வேண்டும் என்று குமாரசாமி   வலியுறுத்தினார்.

Related Stories: