சட்டசபையில் அமைச்சர் அறிவித்தபடி நெல்லையப்பர் யானை அன்றாட நிகழ்வுகள் குறும்படம் வெளியீடு

நெல்லை: சட்டசபையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தபடி நெல்லையப்பர் கோயில் யானையின் அன்றாட நிகழ்வுகள் குறித்த குறும்பட ெதாகுப்பை அறநிலையத்துறை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் யானைகள் உள்ள கோயில்களில் யானைகளின் தினசரி நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ குறும்படமாக தொகுத்து வெளியிடப்படும் என தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவித்திருந்தார். இதன்படி நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோயிலின் காந்திமதி யானையின் அன்றாட நிகழ்வுகளை 50 வினாடிகள் ஓடக்கூடிய குறும்படமாக அறநிலையத்துறையினர் தயாரித்துள்ளனர்.

இதில் காந்திமதி யானை ஷவர் குளியல் மற்றும் புதியதாக கட்டப்பட்டுள்ள யானைக்கான சிறப்பு நீச்சல் குளத்தில் யானை குதூகலமாக குளிப்பது, யானைக்கு வழங்கப்படும் உணவுகள், நடைப்பயிற்சி உள்ளிட்டவைகளை வீடியோ படமாக தொகுத்து வெளியிட்டுள்ளனர். இதுபோல் நெல்லை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கோயில் யானைகளில் அன்றாட நிகழ்வுகளை குறும்படமாக தொகுத்து வௌியிட்டு வருகின்றனர். இது பக்தர்களை கவர்ந்துள்ளது.

Related Stories: