அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் துவங்கி வைத்தது; சிப்காட் சுற்றுப்புற கிராம மக்களுக்கு தினமும் உணவு: ஓராண்டை கடந்தும் தொடர்கிறது

கடலூர்: கடலூரில் தொழிற்சாலைகள் நிறைந்த சிப்காட் பகுதியில் காரைக்காடு, குடிக்காடு, ஈச்சங்காடு, முதுநகர், சங்கொலிகுப்பம், கண்ணார பேட்டை, பூ ண்டியாங்குப்பம், தைக்கால் தோனித்துறை பச்சையாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்கள்  அமைந்துள்ளது. கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுற்றுப்புறத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்தும் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொழிற்சாலைகள் சுற்றுப்புற கிராம மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு திட்டங்களை செயல்படுத்தி கிராமங்கள் வளம் காண உதவிட வேண்டும்.

மக்களுக்கு நலத்திட்டங்களை செய்திட வேண்டும். இதுபோன்று கடலூர் சிப்காட்டில் இயங்கிவரும் நிறுவனங்கள் தங்களின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் அவர்களின் கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து  பூர்த்தி செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வள்ளலாரின் பிறந்த நாளான அக்டோபர் 5ம் தேதி தனிப்பெரும் கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளார். வள்ளலார் பிறந்த இம்மண்ணில் எளிய மக்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்புக்குரியது என அறிவுறுத்தினார்.

இதன் அடிப்படையில் டாக்ரோஸ் நிறுவனத்தின் மூலம்  ஏழை எளிய மக்களுக்கும் உதவிடும் வகையில் அவர்கள் பசியாற்றிடும் வண்ணம் அன்னதானதிட்டம் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களால் கடந்த 7-10-2021ம் ஆண்டு துவங்கப்பட்டது.  டாக்ரோஸ் நிறுவனத்தை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் தொழிலாளர்கள் மற்றும் எளிய மக்களின் வாழ்க்கைதரம் மேம்பாடு அடைய தங்களின் பெருநிறுவன நிதியினை பயன்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களால் துவங்கப்பட்ட அன்னதானத் திட்டத்தால் சிப்காட் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தினமும் உணவு அருந்தி வரும் நிலையில் ஓசையின்றி ஓராண்டை கடந்தும் திட்டம் செம்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் தொழிலாளர்கள், கிராம மக்கள் பசியை போக்கும் வண்ணம் மன நிறைவோடு அமைச்சரின் திட்ட துவக்கத்தை மனதார பாராட்டி வருகின்றனர்.  டாக் ரோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அபிமன்யு ஜாவர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

Related Stories: