காஞ்சிபுரத்தில் தொடர்மழை காரணமாக பாலாறு தடுப்பணையில் நிரம்பி வழியும் உபரிநீர்; விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தொடர்மழை காரணமாக பாலாறு தடுப்பணையில் இருந்து நிரம்பி வழியும் உபரிநீரால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவகால நிலை மாற்றம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாகவே லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடந்த சொர்ணவாரி பருவத்தில் ஏராளமான விவசாயிகள்  தங்கள் விளைநிலங்களில் நெல் பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் 16 நாட்களில் மட்டும் 1228 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாகவே அவ்வப்போது மீண்டும் மழை பெய்ய துவங்கியதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழையசீவரம் மற்றும் மாகரல் தடுப்பணைகள் தற்போது நிரம்பி வழிந்து உபரிநீர் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மண்டலம் அறிவித்த நிலையில், மீண்டும் பாலாறு மற்றும் செய்யாறுகளில் நீர் சென்று கொண்டிருப்பதால் விவசாய பெருமக்களும் மற்றும் குடிநீர் ஆதாரங்களுக்கு இந்த வெள்ள நீர் பெறும் பயனை தரும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: