மின்சார வாகனங்களுக்கு ஏடிஎம்மில் பேட்டரி ரீசார்ஜ்: ஐஐடி இயக்குனர் காமகோடி யோசனை

சென்னை: வங்கி ஏடிஎம்களில் மின்சார வாகனங்களின் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்யும் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி  யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கூறியதாவது: மாசுபடுத்தாத தொழில்நுட்பம், குறைந்த கார்பன் வெளியீடு ஆகியவை தற்போது ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு அவசியமாகும். பெங்களூருவில் பெய்த கனமழைக்கு காலநிலை மாற்றமே காரணம். எனவே தான், சென்னை ஐஐடி சார்பில் தொடர்ச்சியாக மூன்று வருடமாக கார்பன் சேலஞ்ச் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதில் வெற்றி பெறும் குழுக்களுக்கு ஆதார நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். எலக்ட்ரிக் வாகனங்கள் நம்மிடம் அதிக அளவில் இல்லை. அவை அதிக அளவில் வந்த பின்னர் சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பது குறித்து ஆலோசிக்கலாம்.  வாகனத்தின் பேட்டரிக்கு சார்ஜ், சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க ரூ.5 லட்சம் வரை செலவு ஆகும். பஸ் விலையை விட இதன் விலை அதிகமாக இருந்தால் அவற்றை ஈடு செய்ய முடியாது. விலை குறைவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நாம் பேட்டரி பஸ் கொண்டு வர முடியும். எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்கு வங்கி ஏடிஎம்களில் பேட்டரி சார்ஜ் செய்யும் வசதிகள் ஏற்படுத்தலாம்.

Related Stories: