மகாராஷ்டிராவில் ஜன்தன் திட்டம்; 37 லட்சம் வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லை: ஒன்றிய அமைச்சர் தகவல்

மும்பை: கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்ற பிரதமர் மோடி, வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு தொடங்கும் வகையில், ‘ஜன் தன்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் சம்பந்தப்பட்ட பயனாளிக்கு அரசின் நலத்திட்டம் உதவிகள், மானிய உதவிகள் கொண்டு சேர்க்கப்படும் என்றும், ெபாதுமக்கள் வங்கிச் சேவைகளை எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டது. அதனால் ஆதார் கார்டை பயன்படுத்தி பொதுமக்கள் வங்கிக் கணக்குகளை தொடங்கினர். ஆனால், பெரும்பாலான வங்கிக் கணக்குகள் செயல்படாமல் முடங்கியே உள்ளன.

இந்நிலையில் அவுரங்காபாத்தில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பாகவத் காரட் தலைமையில் நடந்த மகாராஷ்டிரா மாநில பேங்கர்ஸ் கமிட்டி கூட்டத்துக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘மகாராஷ்டிராவில் 3.16 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் உள்ளன. இதில் 37 லட்சம் கணக்குகள் செயல்படாமல் உள்ளன. அந்த கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லை. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வங்கிக் கணக்குகளை செயல்படுத்த அறிவுறுத்தப்படும். மகாராஷ்டிராவில் ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் 10 ஆயிரத்து 938 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: