தென்காசி அருகே நடந்த சம்பவத்தில் திடுக்: கள்ளக்காதலிக்கான போட்டியில் புரோட்டா மாஸ்டர் கொலை: கட்டிட தொழிலாளி கைது; பரபரப்பு தகவல்

தென்காசி: தென்காசி அருகே கள்ளக்காதலியை அடைவதில் ஏற்பட்ட போட்டியில் புரோட்டா மாஸ்டரை கொன்ற கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். புரோட்டா மாஸ்டர் நாளை வேலைக்கு கேரளாவுக்கு செல்ல இருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா ஆய்க்குடி அருகே உள்ள கம்பிளி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்சாமி மகன் மகாதேவன் (26). புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அழகையா மகன் மகாதேவன் (23). கட்டிட தொழிலாளி. இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நண்பர்கள் 2 பேரும் தனித்தனியாக அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் அந்த இளம்பெண் தன்னிடம் மட்டும் தான் உல்லாசமாக இருக்கவேண்டும் என்று புரோட்டா மாஸ்டரும், கட்டிட தொழிலாளியும் நினைத்தனர். இதனால் 2 பேருக்கும் இடையே போட்டியும், தகராறும் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு புரோட்டா மாஸ்டர் மகாேதேவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்த கட்டிட ெதாழிலாளி மகாதேவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்தில் பயங்கர வெட்டு விழுந்ததால் சம்பவ  இடத்திலேயே புரோட்டா மாஸ்டர் மகாதேவன் உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்து தப்பியோடிய கட்டிட தொழிலாளி மகாேதேவன் ஆய்க்குடியில் பதுங்கியிருந்தார். அவரை ஆய்க்குடி இன்ஸ்பெக்டர் வேல்கனி, எஸ்ஐ அமிர்தராஜ் ஆகியோர் கைது செய்தனர். கட்டிட தொழிலாளி மகாதேவனும், புரோட்டா மாஸ்டர் மகாதேவனும் ஒரே பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை அவர்களுக்கு நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கண்டித்தனர். இதையடுத்து புரோட்டா மாஸ்டர் நாளை கேரளாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வேலைக்கு செல்வதாக கூறியிருந்தார். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது, கம்பிளி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது….

The post தென்காசி அருகே நடந்த சம்பவத்தில் திடுக்: கள்ளக்காதலிக்கான போட்டியில் புரோட்டா மாஸ்டர் கொலை: கட்டிட தொழிலாளி கைது; பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: