ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மானியக் கோரிக்கை: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

1.“ 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் பயன்பெறும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க வாய்ப்புள்ள மாவட்டங்களில், தலா 50 உறுப்பினர்களைக் கொண்ட 40 புதிய பால் உற்பத்தியாளர் சங்கங்கள் அமைக்கப்படும். அச்சங்கங்களுக்குத் தேவைப்படும் பால் குவளைகள் (Milk Cans), பரிசோதனை உபகரணங்கள் மற்றும் பதிவேடுகள் வாங்க தலா ரூ.1.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் உதவித்தொகை வழங்கப்படும்.”

2.  மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் அதிக அளவில் கறவைமாடு வளர்ப்புத் தொழிலை நம்பியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர்களுக்கு தனியாக பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உருவாக்கி அவர்களின் வாழ்க்கைத்தரம் மேன்மை அடையும் வகையில்,  முதற்கட்டமாக 1800 ஆதிதிராவிட மகளிர் பயனடைய  ஏதுவாக ரூ.36.00 இலட்சம் SCA to SCSP  நிதியிலிருந்து மேற்கொள்ள நிர்வாக அனுமதியும்,  

200 பழங்குடியினர் மகளிர் பயனடைய ரூ.4.00 இலட்சம் மாநில அரசு (CTDP நிதியில்) நிதியிலிருந்து நிதி ஒப்பளிப்பு வழங்கியும், 40 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க அரசாணை(நிலை)எண்.68, ஆதி(ம)பந(சிஉதி) துறை, நாள்.20.08.2022-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: