பாரம்பரிய கட்டிடங்கள் அதிகம் உள்ள நகரமாக சென்னை உள்ளது: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற அடிக்கல் நாட்டுவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ரூ.315 கோடியில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை பாரம்பரிய கட்டிடங்கள் அதிகம் உள்ள நகரமாக உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற அடிக்கல் நாட்டுவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தற்போது உள்ள கட்டிடம் போலவே புதிய கட்டிடமும் இருக்கே வேண்டும் என அமைச்சரிடம் கூறியுள்ளேன் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற அடிக்கல் நாட்டுவிழாவில் முதல்வர் பேசினார்.

சென்னை உயர்நீதிமன்ற பயன்பாட்டிற்காக பழைய சட்டக்கல்லாரி கட்டிடம் புதுப்பிக்கப்படுகிறது எனவும் தற்போதுள்ள கட்டிடம் போலவே புதிய கட்டிடமும் இருக்க வேண்டும் என அமைச்சரிடம் கூறியுள்ளதாகவும், பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாப்பதென்பது வரலாற்றை பாதுக்காப்பது போன்றது என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மேலும் வரும் 30-ம் தேதி ஓய்வு பெறும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி சிறப்பாக பணியாற்றிவருகிறார் எனவும் தலைமை நீதிபதிக்கு வாழ்த்துக்கள் எனவும் முதல்வர் பேசினார்.

Related Stories: