கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் விநாயகர் ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி, சிப்காட், கவரப்பேட்டை, ஆரம்பாக்கம், பாதிரிவேடு ஆகிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரெட்டம்பேடு, ஆத்துப்பாக்கம், வழுதலம்பேடு, குருவிஅகரம், மங்காவரம், கும்மிடிப்பூண்டி பஜார், தண்டலச்சேரி, மாதர்பாக்கம், மாநெல்லூர், தோக்கமூர், நாயுடுகுப்பம், பூவலம்பேடு, கண்ணம்பாக்கம், கண்ணன்கோட்டை, பெரியபுலியூர், புதுவாயல், பெருவாயல், கீழ் முதலம்பேடு, சுண்ணாம்புகுளம், ஓபசமுத்திரம், தேவம்பட்டு, சேகன்னியம், உம்மிபேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், நாளை விநாயகர் சிலைகள் மேளத்தாளங்களுடன் ஊர்வலமாக எளாவூர் ஏழுகிணறு பகுதியில் சிலை கரைப்படுகிறது.
