ஸ்டார்பக்ஸ் சிஇஓ.வாக இந்தியாவை சேர்ந்த லஷ்மன் நியமனம்

நியூயார்க்: இந்திய வம்சாவளியை சேர்ந்த லஷ்மன் நரசிம்மன் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த சர்வதேச நுகர்வோர் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் விற்பனை நிறுவனமான ரெக்கிட் பென்சிக்சர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த லஷ்மன் நரசிம்மன் (55). தற்போது காபி நிறுவனமான ஸ்டார்பக்சின் புதிய சிஇஓ.வாக நியமிக்கப்பட்டு உள்ளார். அக்டோபர் 1ம் தேதி இப்பதவியை அவர் ஏற்கிறார். 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அவர் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இணைவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், ரெக்கிட் நிறுவனமும் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் வரும் 30ம் தேதி வரையில் லஷ்மன் சிஇஒ பொறுப்பில் இருப்பார் என்றும் அதன் பிறகு விலகுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: