மூதாட்டியை தாக்கிய விவகாரம்: இதுதான் மகாராஷ்டிராவின் கலாசாரமா? சிவசேனா எம்பி காட்டம்

மும்பை: மும்பையில் மூதாட்டியை தாக்கிய விவகாரத்தில், இதுதான் மகாராஷ்டிராவின் கலாசாரமா? என்று சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கமாதிபுரா பகுதியில் அமைந்துள்ள கடையின் முன்பாக மூங்கில் குச்சியை வைத்ததற்காக மூதாட்டி ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இந்த வழக்கில் அடையாளம் தெரியாத சிலர் மீது வழக்குபதியப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் கைது செய்யப்பட்டதாகவும் மும்பை போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) உறுப்பினர் வினோத் அர்கில் என்பது தெரியவந்தது. இவ்விவகாரம் குறித்து சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி வெளியிட்ட பதிவில், ‘மூதாட்டியை தாக்கிய சம்பவம், ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் வெட்கக்கேடான நடத்தையை காட்டுகிறது.

இதுதான் மகாராஷ்டிராவின் கலாசாரமா? தாக்குதல் நடத்தியவரின் தலைவர் (ராஜ் தாக்கரே) மகாராஷ்டிர பெண்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும்’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories: