நைஜீரிய பெண்ணை காதலித்து கரம் பிடித்த வாலாஜா வாலிபர்: இந்துமுறைப்படி திருமணம் நடந்தது

வாலாஜா: வாலாஜாவை சேர்ந்த வாலிபர்- நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை சேர்ந்தவர் லட்சுமி, சுப்பிரமணி தம்பதியரின் மகன் திருமால் பிரசாத்(28). இவர் மெக்கட்ரானிக்ஸ் டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளார்.  ஜெர்மன் நாட்டில் வேலை செய்து வருகிறார். ஏற்கனவே நைஜீரியா நாட்டில் சில ஆண்டுகள் வேலை செய்துள்ளார். அங்குள்ள லாகோஸ் என்ற நகரை  சேர்ந்த  பட்ரிசியா இயின்வாஎசா(25)  என்ற    பெண்  சுற்றுலா மற்றும் மருத்துவமனை நிர்வாக  துறையில் பட்டம் பெற்று அங்கேயே வேலை செய்து வருகிறார்.

அவருடன் திருமால் பிரசாத்துக்கு பழக்கம் ஏற்பட்டு, சில ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இந்த நிலையில் இருவரும்  பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். அதற்கான ஏற்பாடுகள் மணமகனின் சொந்த ஊரான வாலாஜாவில் நடந்தது. இந்து முறைப்படி பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம்  நேற்று   நடைபெற்றது.

இதற்காக மணமகள்  பட்ரிச்சியா இயின்வாஎஜெ, நைஜிரியா நாட்டிலிருந்து அண்ணன் சிபுஸோர்வாலண்டைன்எசாவுடன் நேற்று முன்தினம் வாலாஜாவிற்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு  வரவேற்பு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மாப்பிள்ளை   அழைப்பு, நாதஸ்வர கச்சேரியுடன்  நடந்தது. மணமக்கள் இருவரும் அங்குள்ள கோயிலுக்கு சென்று தாம்பூல தட்டுகள் மாற்றப்பட்டது. பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான  உறவினர்கள் கலந்து கொண்டனர்.

தொடந்து நேற்று காலை திருமணம் நடைபெற்றது. அதில் மணமகள் தமிழ் முறைப்படி பட்டுச்சேலை மற்றும் நகைகள் அணிந்திருந்தார். பின்னர்  கெட்டி மேளம் முழங்க, புரோகிதர் மந்திரம் ஓத மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி  கட்டினார்.   அனைவரும்  அட்சதை போட்டு ஆசிர்வாதம் செய்தனர்.

Related Stories: