மாணவிகளின் ஆய்வுப் படிப்புக்கு ஷாருக்கான் உதவி

மும்பை: பாலிவுட் முன்னணி ஹீரோ ஷாருக்கான், கல்விக்காக நிறைய உதவிகள் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது கல்வி அறக்கட்டளை மூலம் லா ட்ரோப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி ஆய்வு செய்து வரும் மாணவிகளுக்கு உதவித்தொகையை வழங்கி வருகிறார். இதுபோன்ற பணியை அவர் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கினார். முதல் மாணவியாக கேரளாவிலுள்ள திருச்சூரை சேர்ந்த கோபிகா உதவித்தொகை பெற்றார். இதற்கிடையில், கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்தப் பணியை தற்போது ஷாருக்கான் மீண்டும் தொடங்கியுள்ளார். உதவித்தொகை வேண்டு பவர்கள், வரும் செப்டம்பர் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் 10 ஆண்டுகளுக்குள் முதுகலை ஆராய்ச்சிப் பட்டம் முடித்த இந்தியப் பெண்ணாக இருக்க வேண்டும். தேர்ந்து எடுக்கப்பட்ட மாணவிகளுக்கு 4 வருட லா ட்ரோப் பல்கலைக்

கழக முழு கட்டண ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: