அதிமுக ஆட்சியில் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.78 கோடியில் தரமற்ற முறையில் கட்டடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக ஆட்சியில் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.78 கோடியில் தரமற்ற முறையில் கட்டடம் கட்டப்பட்டிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மா.சுப்பிரமணியன், 2016ல் ஆணை வழங்கப்பட்டு, 2019ல் தேசிய முதியோர் நல மருத்துவ மைய கட்டிடம் தரமற்ற முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு கொரோனா வார்டாக 2 ஆண்டுகள் கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. முதியோர் நல மருத்துவ மைய கட்டிடத்தின் சுவர் பகுதிகள் கை வைத்தாலே உதிரும் அளவுக்கு உள்ளன.

நோயாளிகளுக்கு மத்தியில் அச்ச உணர்வு இருந்ததால் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்கள். தலைமை பொறியாளர் மற்றும் பணியாளர்களை அனுப்பி கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எம் சாண்ட் மூலம் பூச்சு வேலை செய்யும்போது முறையான ரசாயன கலவை பயன்படுத்தவில்லை. கட்டிட ஒப்பந்ததாரர் பெரியசாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. முறையாக பணியை மேற்கொண்டோம் என கூறிய ஒப்பந்ததாரர், தற்போது முறைப்பாட்டை சரிசெய்ய முன்வந்துள்ளார் என அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: