திருவனந்தபுரம்: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் 2013ம் ஆண்டு வெளியானது. பேமிலி த்ரில்லர் பாணியில் உருவான இந்த படத்தில் மீனா, எஸ்தர் அலி, ஆஷா சரத், அன்சிபா ஹசன் நடித்திருந்தார்கள். கேரளாவில் முதன் முறையாக 100 கோடி வசூலித்த படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ரீமேக் ஆனது. அதற்கு பிறகு இந்த படத்தின் 2ம் பாகம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் தவிர மற்ற மொழிகளில் ரீமேக் ஆனது. இந்த படத்திலும் முதல் பாகத்தில் நடித்தவர்களே நடித்திருந்தார்கள். இரு பாகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இதன் 3ம் பாகத்துக்கு நிறைய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டது.