ஜெயலலிதா மரணம் வழக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நாளை தாக்கல் செய்கிறது ஆறுமுகசாமி ஆணையம்..!!

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் நாளை தனது அறிக்கையை  தாக்கல் செய்ய உள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அறிக்கை தாக்கல் செய்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பரில் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 5 வருடங்களாக பல்வேறு தரப்பினரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை, சிகிச்சையளித்த எய்ம்ஸ் மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. 14 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் 158 பேரிடம் ஆணையம் தனது விசாரணையை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், நாளை முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்யப்பட்ட 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்ய உள்ளது.

Related Stories: