சென்னை - பரந்தூர் வரை 100 அடியில் சாலை அமைவதால் விமான நிலையம் வந்ததாக அர்த்தம்: திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பேட்டி

சென்னை: சென்னை - பரந்தூர் வரை 100 அடியில் உலகத்தரம் வாய்ந்த சாலை அமைத்தாலே விமான நிலையம் வந்ததாக அர்த்தம் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறினார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு தலைமையில்  நடந்தது.  

பின்னர், செய்தியாளர்களிடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியதாவது: மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 2027ம் ஆண்டிற்குள் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, புதிய கட்டமைப்பு தேவைப்படுவதால் பரந்தூரில் 2வது விமான நிலையம் அமைக்கப்படுகிறது. இதை நடைமுறைப்படுத்தும்போது சென்னை - பரந்தூர் வரை 100 அடியில் உலகத்தரம் வாய்ந்த சாலை அமைக்கப்படும். அப்போதே விமான நிலையம் வந்ததாக அர்த்தம்.  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு என்பது இருக்கத்தான் செய்யும். பாரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருவதால் இப்பிரச்னை நிலவுகிறது. அதற்கு உரிய தீர்வும் காணப்படும். பொதுமக்களின் கருத்து கேட்புக்கூட்டம், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் திட்ட செயல்பாட்டை வழிமுறைகளும் முறையாக பின்பற்றி மிக விரைவில் திட்டம் செயல்படும் என்றார்.

Related Stories: