திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்; தமிழகத்துக்கு வரும் ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பளிக்க ஏற்பாடு

திருவள்ளூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் நினைவிடத்திற்கு வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகை தருகிறார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடைபாதை யாத்திரை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து ராகுல் காந்தி வருகையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திருவள்ளூரில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வடக்கு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான வழக்கறிஞர் வி.இ.ஜான் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் ஜெ.டி.அருள்மொழி, பூண்டி ஆர்.ராஜா, பி.ரமேஷ், ஏ.எஸ்.சிவா ரெட்டியார், எஸ்.சரஸ்வதி, டி.வடிவேலு, வி.எஸ்.ரகுராமன், ராமன், சி.வெங்கட்ராஜ், இருதயராஜ், லோகநாதன், விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில துணை தலைவர் டி.எஸ்.சதாசிவலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் மாநில நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், சி.பி.மோகன்தாஸ், எம்.சம்பத், கோவிந்தராஜ், ஒய்.அஸ்வின் குமார், குணாநிதி, ஜோதி சுதாகர், வட்டார தலைவர்கள் ஜி.எம்.பழனி, சம்பத், கார்த்தி, மாத்தையன், தியாகராஜன், முகுந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செப்டம்பர் மாதம் 7ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மேற்கொள்ள உள்ள பாதை யாத்திரைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி உத்தரவின் பேரில் செயல் தலைவர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்பி மற்றும் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆகியோர் ஆலோசனையின் பேரில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து பெருந்திரளாக கலந்து கொள்வது என்றும், பாதயாத்திரை பொறுப்பாளர்களாக திருவள்ளூர் தொகுதிக்கு ஜெ.டி.அருள்மொழி ஆர்.ராஜா, கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு ஏ.எஸ்.சிவா ரெட்டியார், பொன்னேரி வி.எஸ்.கோபி கிருஷ்ணன், கே.எம்.சந்திரசேகர், 4திருத்தணி தொகுதிக்கு சி.வெங்கட்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: